உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொன்னுமாரியம்மன் கோவில் செடல் விழா 29ல் நடக்கிறது

பொன்னுமாரியம்மன் கோவில் செடல் விழா 29ல் நடக்கிறது

புதுச்சேரி;முத்தியால்பேட்டை வேலாயுத பிள்ளை நகர் பொன்னுமாரியம்மன் கோவில் செடல் தேர் விழா வரும் 29ம் தேதி நடக்கிறது.முத்தியால்பேட்டை வேலாயுதபிள்ளை நகர் பொன்னுமாரியம்மன் கோவில் 81வது ஆண்டு பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் கணபதி பூஜையுடன் துவங்கியது.இரண்டாம் நாளான நேற்று பிரம்மோற்சவ விழா நடந்தது. இரவு 7.00 மணிக்கு மங்களகிரி விமானத்தில் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று 22ம் தேதி இரவு 7.00 மணிக்கு சூரிய பிரபையில் கிருஷ்ணமூர்த்தி அலங்காரம், நாளை 23ம் தேதி சந்திர பிரபையில் சரஸ்வதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.29ம் தேதி மதியம் 2.00 மணிக்கு செடல் உற்சவம், மாலை 5.00 மணிக்கு தேர் உற்சவமும், அதனை தொடர்ந்து காத்தவராய சுவாமி கழுமரம் ஏறும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 31ம் தேதி ஊஞ்சல் உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !