உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சொரத்தூர் பூவாத்தம்மன் கோவிலில்108 பால் குட ஊர்வலம்

சொரத்தூர் பூவாத்தம்மன் கோவிலில்108 பால் குட ஊர்வலம்

செஞ்சி; சொரத்துார் பூவாத்தம்மன் கோவிலில், 108 பால் குட ஊர்வலம் நடந்தது. செஞ்சி அருகே உள்ள சொரத்துார் பூவாத்தம்மன் கோவிலில் ஆடி பவுர்ணமி விழா நடந்தது. இதை முன்னிட்டு சொன்ன வன்ன பெருமாள், விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். விநாயகர் கோவிலில் இருந்து 108 பால் குடங்களை பெண்கள் பூவாத்தம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர். அங்கு அம்மனுக்கு பால் அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். மாலையில் பெண்கள் பொங்கல் வைத்து நேர்த்தி கடன் செலுத்தினர். இரவு சாமி வீதியுல நடந்தது. விழா ஏற்பாடுகளை சொரத்துார் கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !