வனபத்ரகாளியம்மன் கோவிலில் தமிழ்முறை லட்சார்ச்சனை
ADDED :3462 days ago
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் திருவிழா கடந்த, 19ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. நேற்று காலை தமிழ்முறை லட்சார்ச்சனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனுக்கு கோவை பேரூர் ஆதினம் இளையப்பட்டம் மருதாசல அடிகளார் முன்னிலையில், மூலத்துறை குழந்தைவேல், சக்திவேல் மற்றும் சிவனடியார்கள் லட்சார்ச்சனையை செய்தனர். கோவில் உதவி கமிஷனர் ராமு, பரம்பரை அறங்காவலர் வசந்தா, பூசாரி பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.இன்று இரவு, 10:00 மணிக்கு கிராமசாந்தி, முனியப்பன், பகாசூரன் வழிபாடு நிகழ்ச்சியும், 24ம் தேதி காலை, 10:00 மணிக்கு கொடியேற்றமும், மாலையில் அம்மன் திருவீதி உலாவும், 25ம் தேதி மாலை பொங்கல் வைத்து குண்டம் திறப்பும், 26ம் தேதி காலை, 6:00 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.