கடலுார் முத்தாலம்மன் கோவிலில் செடல் உற்சவம்
ADDED :3733 days ago
கடலுார்: தேவனாம்பட்டினம் முத்தாலம்மன் கோவிலில் செடல் உற்சவம் நடந்தது. கடலுார் தேவனாம்பட்டினம் முத்தாலம்மன் கோவில் செடல் உற்சவத்தை யொட்டி கடந்த 20ம் தேதி கொடியேற்றம் நடந்தது. நேற்று முன்தினம் அம்மனுக்கு அபிஷேகம், ஊஞ்சல் உற்சவம் நடந்தது. நேற்று காலை கரகம் எடுத்து வருதல், சாகை வார்த்தல், செடல் நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று செடல் போட்டு நேர்த்திக் கடன் செலுத்தி, சுவாமி தரிசனம் செய்தனர். இரவு வீதியுலா நடந்தது. இன்று காலை 7:00 மணிக்கு மேல் மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.