சாமுண்டீஸ்வரி கோவிலில் சண்டி ஹோமம் துவக்கம்
ADDED :3397 days ago
ஈரோடு: ஈரோடு அருகே, நஞ்சை ஊத்துக்குளி சாத்தப்பூர் ஆதிபெரிய சாமுண்டீஸ்வரி கோவிலில், 27 நட்சத்திரங்களுக்கான சண்டி ஹோமம் நேற்று துவங்கியது. மக்கள் நல்வாழ்வு பெறவும், சத்ரு பயங்கள் நீங்க, நீர் வளம், நில வளம் செழிக்க வேண்டி இது நடக்கிறது. இதில், 27 நட்சத்திரங்களுக்கும் தனித்தனியாக ஹோமங்கள் நடத்தப்பட்டு, அந்த நட்சத்திரத்துடன் தொடர்புடையவர் நன்மை பெற வழிபாடு செய்யப்படுகிறது. ஆக., 16ம் தேதி வரை தினமும் ஒவ்வொரு நட்சத்திரங்களுக்காக ?ஹாமம், சிறப்பு பூஜை நடக்கிறது. நேற்றைய பூஜையில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். சிருங்கேரி முத்ராதிகாரி பத்மநாப ஐயர் தலைமையில், சிருங்கேரி வித்யா உபாசகர்கள் இந்த ஹோமத்தை நடத்துகின்றனர்.