முனியப்பன் கோவிலில் ரூ.54,339 காணிக்கை
நெய்க்காரப்பட்டி: கொண்டலாம்பட்டி அடுத்த, நெய்க்காரப்பட்டியில் உள்ள மூங்கில்குத்து முனியப்பன் கோவிலில், ஆடி மாத முதல் வியாழனன்று, நேற்று முன்தினம், பக்தர்கள் பொங்கல் வைத்து, ஆடு,கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை, 4 மணியளவில், எருது ஊர்வலம் நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் குடும்பத்தினருடன் வந்து, சுவாமி தரிசனம் செய்து, முனியப்பனுக்கு காணிக்கை செலுத்தினர். சிலர் வேண்டுதல் காணிக்கையும் செலுத்தி வழிபட்டனர். அதில், விழாவையொட்டி வைக்கப்பட்ட பிரத்யேக உண்டியல், நேற்று மதியம், 1 மணிக்கு திறக்கப்பட்டது. ஓமலூர் கோவில் ஆய்வாளர் கல்பனா தலைமையில், 10 ஊழியர்கள் காணிக்கையை எண்ணினர். அதில், 54 ஆயிரத்து, 339 ரூபாய் வருவாயாக கிடைத்தது. செயல் அலுவலர் பாலசுப்ரமணி கூறுகையில், வரும், 27ம் தேதி, மறுபூஜை நடக்கிறது. அதற்காக, தற்காலிக உண்டியல் தனியாக வைக்கப்பட்டுள்ளது. அது, 28ம் தேதி திறக்கப்படும், என்றார்.