உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாகம்பிரியாள் கோயிலில் நேர்ச்சை பொருட்கள் ஏலம்

பாகம்பிரியாள் கோயிலில் நேர்ச்சை பொருட்கள் ஏலம்

திருவாடானை: திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில்களில் பக்தர்கள் நேர்ச்சைக்காக வழங்கும் பொருட்கள் ஏலம் விடபட்டது. கோழி, சேவல் ரூ.20 லட்சத்து 3 ஆயிரத்திற்கு ஏலம் போனது. பக்தர்களுக்கு வழங்கபடும் பிரசாதம் ரூ.20 ஆயிரத்து 200, விபூதி, குங்குமம் ரூ.44 ஆயிரத்து 500, சந்தனம் ரூ.21 ஆயிரத்து 400 ஏலம் போனது. முடிக்கு தொகை அதிகமாக நிர்ணயிக்கபட்டதால் ஏலம் கேட்க யாரும் முன்வரவில்லை. இந்து அறநிலைய துறை உதவி ஆனையர் ராமசாமி, ஆய்வாளர் சுந்தரேஸ்வரி, தேவஸ்தான் கண்காணிப்பாளர் சரவணகணேசன், கவுரவ கண்காணிப்பாளர் முத்துகண்ணன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !