முத்துப்பல்லக்கில் பெருமாள் வீதியுலா
வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித்திருவிழாவில் முத்துப்பல்லக்கில் சுவாமி இரவு முழுவதும் வீதியுலா வந்தார். கடந்த ஜூலை 11ல் கொடியேற்றத்துடன் துவங்கி இன்றிரவுடன் 13 நாள் திருவிழா நிறைவடைகிறது. நாள்தோறும் இரவு மண்டகபடிதாரர் சிறப்பு வழிபாடு, பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடும், கலை நிகழ்ச்சியும் நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சிகளாக ஜூலை 17ல் திருக்கல்யாணமும், ஜூலை 19ல் தேரோட்டமும் நடந்தது. திருவிழாவில் அதிகளவில் பக்தர்கள் பங்கேற்கும் வசந்தம் முத்துப்பல்லக்கு நேற்றுமுன்தினம் இரவு நடந்தது. சன்னதியில் இருந்து முத்துப்பல்லக்கில் புறப்பட்ட சவுந்தரராஜப் பெருமாள் இரவு முழுவதும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தெருக்களில் காத்திருந்த பக்தர்கள் அபிஷேக, ஆராதனை செய்து வழிபட்டனர். நேற்று அதிகாலை சுவாமி சன்னதி திரும்பினார். ஏற்பாட்டினை கோயில் செயல் அலுவலர் மகேந்திரபூபதி, தக்கார் வேல்முருகன் , பொதுமக்கள் செய்திருந்தனர்.