திண்டுக்கல் அம்மன் கோயில்களில் ஆடிவெள்ளி சிறப்பு பூஜை
ADDED :3398 days ago
திண்டுக்கல்": ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழயை முன்னிட்டு நேற்று கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர். இதே போல் அபிராமி அம்மன் கோயில், நாகல்நகர் புவனேஷ்வரி அம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோயிலில் ஆடிவெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. அண்ணாநகர், மீனாட்சிபுரம், கோவில்பட்டி, அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பெண்கள் கூடைகளில் மலர்களை எடுத்துச் சென்று வழிபட்டனர். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பூஜைகளில் பங்கேற்றனர்.