உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்று சங்கடஹர சதுர்த்தி: விநாயகருக்கு ஹோமம்

இன்று சங்கடஹர சதுர்த்தி: விநாயகருக்கு ஹோமம்

திருவள்ளூர்: சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் கோவில்களில் ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேகம் இன்று நடக்கிறது. ஒவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று, விநாயகருக்கு ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இன்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, சோழவரம் அடுத்த, நத்தம் காரிய சித்தி கணபதி கோவிலில், சங்கடஹர நிவாரண ஹோமம், காலை 9:00 மணிக்கு நடக்கிறது. தொடர்ந்து, மூலவருக்கு பழ வகைகளால் அபிஷேகம் செய்து, மலர்களால் சிறப்பு அலங்காரம் நடைபெறும். தொடர்ந்து, ககார ஸகஸ்ரநாம அர்ச்சனையும், மகா தீபாராதனையும் நடக்கிறது. தே போல், திருவள்ளூர் ஜெயா நகர் வல்லப கணபதி கோவில், சிவ - விஷ்ணு கோவிலில் உள்ள செல்வ விநாயகர், திரிபுர சுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவிலில் உள்ள வரசித்தி விநாயகர், ஆயில் மில் வெற்றி விநாயகர் கோவில், திருப்பாச்சூர் தங்காதலி அம்மன் சமேத வாசீஸ்வரர் கோவிலில் உள்ள விநாயகர் சபை உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு ஹோமம், அபிஷேகம் மற்றும் ஆராதனை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !