சிதம்பரம் மாரியம்மனுக்கு ஆடி பிரம்மோற்சவ கொடியேற்றம்!
ADDED :3401 days ago
சிதம்பரம்: சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் ஆடி மாத பிரம்மோற்சவம் கொடியேற்று விழா நடந்தது. விழாவையொட்டி, கடந்த 22ம் தேதி இரவு மாரியம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அம்மன் சன்னதி எதிரில் உள்ள உற்சவ கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை வழிபாடு செய்து, உற்சவ கொடி ஏற்றி சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதனையடுத்து, தினமும், மாரியம்மனுக்கு சிறப்பு பூஜையும், காத்தவராயன் கதை சொற்பொழிவும், இரவு சுவாமி வீதியுலாவும் நடக்கிறது. நாளை 26ம் தேதி தெருவடைச்சான், 31ம் தேதி திருத்தேரோட்டம். ஆகஸ்ட் 1ம் தேதி செடல் மற்றும் தீமிதி உற்சவம் நடக்கிறது.