ராமேஸ்வரம் கோயிலில் ஆடித் திருக்கல்யாணம் - ஜூலை 27ல் கொடி ஏற்றம்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாண திருவிழா ஜூலை 27ல் கொடி ஏற்றத்துடன் துவங்குகிறது. 17 நாட்கள் தொடர்ந்து விழா நடக்கிறது. ராமேஸ்வரம் திருக்கோயிலில் ஆடி, மாசி திருவிழா முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதில் ஆடித் திருக்கல்யாண திருவிழா ஜூலை 27ல் கொடி ஏற்றத்துடன் துவங்குகிறது. அன்று காலை பர்வதர்வர்த்தினி அம்மன் சன்னதி முன்புள்ள கொடி மரத்தில் விழா கொடி ஏற்றப்பட உள்ளது. இதன் பின் ஆடி அமாவாசை அன்று ஸ்ரீ ராமர் அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தம் வாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. ஆக., 4ல் ஆடித் தேரோட்டம், 6ல் தபசு மண்டபத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளி மாலை மாற்றுதல், 7ல் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி, அம்மனுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. 17 நாட்கள் தொடர்ந்து நடக்கும் விழாவில் பர்வதவர்த்தினி அம்மன் தங்கம், வெள்ளி வாகனங்கள், பல்லாக்கில் வீதி உலாவரும் நிகழ்ச்சி நடக்கிறது.