முறப்பநாடு!
அகத்தியரின் சீடரான உரோமசர், தாமிரபரணி கரையில் பல இடங்களில் லிங்க வழிபாடு செய்ய விரும்பினார். இதை தனது குருவிடம் தெரிவித்து இடங்களை தேர்வு செய்து தரச்சொன்னார். அகத்தியர் அவரிடம் ஒன்பது தாமரை மலர்களைக் கொடுத்து, அவற்றை நதியில் இடும்படியும், அவை ஒதுங்கும் இடங்களில் லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபடும்படியும் கூறினார். உரோமசரும் அவ்வாறே செய்தார். அவ்வாறு லிங்கப் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களில் பிற்காலத்தில் கோவில்கள் தோன்றின அந்த சிவாலயங்கள் கைலாயத்துக்கு ஒப்பானதாகக் கருதப்பட்டதால், நவ கைலாயம்’ எனப்பட்டது. இதில் துõத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு என்ற இடத்தில் அமைந்த கைலாசநாதர் கோவில் நவக்கிரகங்களில் வியாழனுக்குரியதாக உள்ளது. இங்கு உரோமசருக்கு சிவன் குருவாக இருந்து உபதேசம் செய்தார். இங்குள்ள சிவலிங்கத்துக்கு மஞ்சள் வஸ்திரமும், கொண்டைக்கடலை மாலையும் சாத்தப்படுகிறது.