உலக நன்மை வேண்டி 1008 லிங்க பீடங்கள்!
ADDED :3731 days ago
சாணார்பட்டி: திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உலக நன்மை வேண்டி 1008 லிங்க பீடங்கள் அமைக்கும் பணி நடக்கிறது. சாணார்பட்டி ஒன்றியம் அதிகாரிபட்டி அருகே காம்பார்பட்டியில் ஆத்மலிங் கேஷ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் வளாகம் அருகே உலக நன்மை வேண்டி வருகிற ஆக., 5 (ஆடிப்பூரம்) அன்று 1008 ருத்ர யாகங்கள் நடக்க உள்ளது. இதற்காக லிங்க பீடங்கள் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வரு கிறது. இந்த விழாவில் தம்பதியினராக கலந்துகொள்வது சிறப்பாகும். எதிர்காலத்தில் யாகம் நடக்கும் இடத்தில் 1008 லிங்கங்கள் பிரதிஷ்டை செய்து கோயில் கட்ட ஏற்பாடுகள் நடந்து வருவதாக விழாக் குழுவினர் தெரிவித்தனர்.