காரைக்கால் கரியமாணிக்க பெருமாள் ஊஞ்சல் உற்சவம்!
ADDED :3403 days ago
புதுச்சேரி: காரைக்கால் ஸ்ரீகரியமாணிக்க பெருமாள் கோவிலில் நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். புதுச்சேரி மாநிலம் நிரவியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீஜெம்புநாத சுவாமி தேவஸ்தானம் ஸ்ரீகரியமாணிக்க பெருமாள் கோவிலில் உற்சவ மூர்த்திக்கு வஜ்ராங்கி சமர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சியும், ஊஞ்சல் உற்சவமும் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக, சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனமும், தொடர்ந்து வஜ்ராங்கியை உற்சவ மூர்த்திக்கு சமர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.