உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடையார்குடி துர்க்கை அம்மன் கோவில் தேர் திருவிழா

உடையார்குடி துர்க்கை அம்மன் கோவில் தேர் திருவிழா

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் உடையார்குடியில் உள்ள துர்கை அம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.  கடந்த 15ம் தேதி  கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினமும் துர்கை அம்மனுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. தினமும் இரவில் துர்கை அம்மன்,  ஆதிபராசக்தி, மீனாட்சி, மகாலட்சுமி, காமாட்சி, ராஜராஜேஸ்வரி சுவாமிகள் தினமும் வீதியுலா நடந்தது. முக்கிய விழாவான தேர் திருவிழா நேற்று  நடந்தது. துர்கை அம்மன் சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனைத் தொடர்ந்து பக்தர்கள்  தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்னர், சக்தி கரகத்துடன் பால் காவடி எடுத்து ஊர்வலம் சென்றனர். விழா ஏற்பாடுகளை செங்குந்த மகாஜன  சங்கம் மற்றும் இளைஞர் நற்பணி இயக்கத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !