திரவுபதி அம்மன் கோவிலில் 4ல் தீமிதி திருவிழா துவக்கம்
ADDED :3402 days ago
கடம்பத்துார்: கடம்பத்துார், திரவுபதி அம்மன் கோவிலில், வரும் 4ம் தேதி, தீமிதி திருவிழா துவங்குகிறது. திருவள்ளூர் அடுத்த, கடம்பத்துாரில் உள்ளது திரவுபதி அம்மன் கோவில். இங்கு, இந்த ஆண்டு தீமிதி திருவிழா, வரும் 4ம் தேதி காலை, விநாயகர் பூஜையுடன் துவங்குகிறது. பின், இரவு 7:00 மணிக்கு, விநாயகர் வீதிவுலாவும் நடைபெறும். அதை தொடர்ந்து மறுநாள், காலை 5:00 மணிக்கு மேல், 6:00 மணிக்குள், கொடியேற்றம் நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா, வரும் 14ம் தேதி, மாலை 6:00 மணிக்கு நடைபெறும். தொடர்ந்து, 12 நாட்கள் தீமிதி திருவிழா நடைபெறும்.