சங்கராபரத்தில் மண்டலாபிஷேக நிறைவு விழா
ADDED :3402 days ago
சங்கராபுரம்: சங்கராபரத்தில் மண்டலாபிஷேக நிறைவு விழா நடந்தது. சங்கராபுரம் கடைவீதியில் உள்ள அரசமரத்தடி வினாயகர் கோவில், ரு.10 லட்சத்தில் புனரமைக்கபட்டு, கடந்த ஜூன் மாதம் 9 ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இதனை தொடர்ந்து தினசரி மண்டல பூஜை நடந்தது. நேற்று மண்டலாபிஷேகம் நிறைவு நாளை முன்னிட்டு வினாயகர், சரஸ்வதி, அம்மன் சுவாமி சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது.