உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூலசமுத்திரத்தில் விளக்கு பூஜை

மூலசமுத்திரத்தில் விளக்கு பூஜை

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை தாலுகா மூல சமுத்திரம் மாரியம்மன் கோவிலில், 108 விளக்கு பூஜை நடந்தது. விழாவையொட்டி மாலை 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடந்தது. தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு, 108 குத்துவிளக்கு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !