அரசாளவந்த அம்மன் கோயில் பால்குடம் ஊர்வலம்
ADDED :3462 days ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அரசாளவந்த அம்மன் கோயில் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக பால்குடம் ஊர்வலம் நடந்தது. அருகில் உள்ள திரவுபதி அம்மன் கோயிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். பரம்பை ரோடு, பஜார் வீதி, காந்திவீதி, சிலுகவயல் ரோடு வழியாக ஊர்வலம் அம்மன் கோயிலை அடைந்தது. தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.