உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கங்கா தீர்த்த விற்பனை கேரளாவில் அமோகம்!

கங்கா தீர்த்த விற்பனை கேரளாவில் அமோகம்!

கொச்சி: மத்திய அரசால் சமீபத்தில் துவக்கப்பட்ட, புனித கங்கை நதிநீர் திட்டத்துக்கு, கேரளாவில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில் கங்கை நதிநீர் சேகரிக்கப்பட்டு, டில்லிக்கு எடுத்து வரப்படுகிறது. பின், அந்த நீர், பாட்டில்களில் அடைக்கப்பட்டு, நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. சமீபத்தில், டில்லியிலிருந்து கேரள மாநிலத்துக்கு, 549 பாட்டில்களில் கங்கை நீர் விற்பனைக்கு வந்தது. கோழிக்கோடு தபால் நிலையத்தில், ஒரு வாரத்தில் மட்டும், 150 பாட்டில் கங்கை தீர்த்தம் விற்பனையாகி உள்ளது. கேரளாவில் உள்ள மற்ற தபால் நிலையங்களிலும், கங்கை தீர்த்தம் விற்பனை சூடு பிடித்துள்ளது. இதனால், தங்கள் மாநிலத்துக்கு மேலும் அதிக பாட்டில்களை அனுப்பி வைக்கும்படி, டில்லியில் உள்ள தபால் துறை தலைமையகத்துக்கு, கேரள தபால் துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !