நம்மாழ்வார் ஐக்கிய வைணவ சபை மாநாடு
ADDED :3401 days ago
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட நம்மாழ்வார் ஐக்கிய வைணவ சபை சார்பில், வைணவ மாநாடு நடந்தது. விழுப்புரம் ஜெயசக்தி திருமண மண்டபத்தில் நடந்த மாநாட்டிற்கு, வேதாந்த ராமாநுஜதாசன் தலைமை தாங்கினார். வனிதா திருமால் வணக்கம் பாடினார். மாவட்ட நம்மாழ்வார் ஐக்கிய வைணவ சபை தலைவர் கண்ணன் வரவேற்றார். செயலாளர் ராஜாராம் ஆண்டறிக்கை வாசித்தார். திருக்கோவிலு?ர் ஜீயர் ஸ்ரீனிவாச ராமாநுஜாச்சார்யார் சுவாமி ஆசியுரை வழங்கினார். மதுராந்தகம் ரகுவீர் பட்டாச்சாரியார், தில்லை திருச்சித்திரக்கூடம் ரங்காச்சாரியார் சுவாமி ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர். தென்திருப்பேர் அரவிந்த லோசனன் சுவாமி சிறப்புரையாற்றினார். பொருளாளர் ராமசாமி நன்றி கூறினார்.