திருக்கோவிலுார் முத்துமாரியம்மனுக்கு சாகை வார்த்தல் விழா
ADDED :3402 days ago
திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் முத்துமாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் உற்சவம் நடந்தது. அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில், ஆடி உற்சவத்தையொட்டி நேற்று முன்தினம், சாகை வார்த்தல் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு மகா அபிஷகம் சந்தனகாப்பு அலங்காரமும் நடந்தது. பின், சக்திகரகம் புறப்பாடு நடந்தது. இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.