உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருத்தாசலம் கோவிலில் ஆடிப்பூர திருக்கல்யாண கொடியேற்று விழா!

விருத்தாசலம் கோவிலில் ஆடிப்பூர திருக்கல்யாண கொடியேற்று விழா!

விருத்தாசலம்: விருத்தாசலம், விருத்தகிரீஸ்வரர் கோவிலில், ஆடிப்பூர திருக்கல்யாண விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா நேற்று நடந்தது.  விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி காலை  10:45 மணிக்கு மேல் பகல் 11:50 மணிக்குள் சிம்ம லக்கினத்தில் கொடியேற்று விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து  வரும் 4ம் தேதி திருத்தேர் விழா, 5ம் தேதி படிக பல்லக்கு விழா, 6ம் தேதி திருமாங்கல்யதாரணம் நடக்கிறது.

திட்டக்குடி: அசனாம்பிகை உடனுறை  வைத்தியநாதசுவாமி கோவிலில் காலை 11:00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆடிப்பூர திருவிழா துவங்கியது. தொடர்ந்து சிறப்புவழிபாடு மற்றும்  மகாதீபாரதனை நடந்தது. தொடர்ந்து தினமும் காலை, மாலை சிறப்பு பூஜை மற்றும் சுவாமி வீதியுலா நடக்கிறது. ஆகஸ்டு 5ம் தேதி காலை  தீர்த்தவாரியும், மாலை திருக்கல்யாணமும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !