திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர திருவிழா !
ADDED :3402 days ago
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில்ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக சிநேகவல்லிதாயாருக்கு சிவாச்சாரிய õர்கள் வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடத்தினர். விழாவில் தேவஸ்தான செயல்அலுவலர் சந்திரசேகர் மற்றும் 22 கிராம நாட்டார்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான ஆக., 4ல் தேரோட்டம், 5ல் யாககும்பாபிஷேகம், 6ல் அம்பாள் தபசு, 7ல் திருக்கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது.