செட்டிப்பட்டு கோவிலில் ஆடி திருவிழா துவக்கம்
ADDED :3403 days ago
புதுச்சேரி:செட்டிப்பட்டு பேட் முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா இன்று 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை கூழ் வார்த்தல், மாலை 6:00 மணிக்கு காப்பு கட்டுதல், இரவு அம்மன் வீதியுலா நடந்தது. இன்று (28ம் தேதி) மாலை 6:00 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. நாளை 29ம் தேதி காலை 10:00 மணிக்கு அலகு போடுதல், 12:00 மணிக்கு கூழ் வார்த்தல் நடக்கிறது. 30 மற்றும் 31ம் தேதிகளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை, கிராம மக்கள் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.