உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வழிவிடு முருகன் கோயிலில் திருவிளக்கு பூஜை

வழிவிடு முருகன் கோயிலில் திருவிளக்கு பூஜை

ராமநாதபுரம் : வழிவிடு முருகன் கோயிலில் மகாலட்சுமி விரத திருவிளக்கு பூஜை நடந்தது. தலைமை ஆசிரியை கன்னிகா தலைமை வகித்தார். டாக்டர் வித்யா பிரியதர்ஷினி முன்னிலை வகித்தார். அன்பு இல்ல நிர்வாகி மோகன், சேவாபாரதி நிர்வாகி ஆடலரசன், மாநில சேவாபாரதி நிர்வாகி முனியசாமி பேசினர். ஏற்பாடுகளை சேவாபாரதி தென்தமிழ்நாடு சார்பில் ஒருங்கிணைப்பாளர்கள் யோகேஸ்வரி, சிகப்பி அம்மாள், ஜோதி, பிரதீபா, நகர் தலைவர் நாகேஸ்வரன் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !