உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுயம்பு திருவீதி அம்மனுக்கு நாளை பாலாபிஷேகம்

சுயம்பு திருவீதி அம்மனுக்கு நாளை பாலாபிஷேகம்

குண்டுமேடு: திருமழிசை, குண்டுமேடு கிராமத்தில் உள்ள சுயம்பு திருவீதி அம்மன் கோவிலில், நாளை, பாலாபிஷேகம் நடைபெற உள்ளது. வெள்ளவேடு அடுத்த, திருமழிசை, குண்டுமேடு கிராமத்தில் உள்ளது சுயம்பு திருவீதி அம்மன் கோவில். இந்த கோவிலில், 2ம் ஆண்டு பால்குட அபிஷேக திருவிழா, நாளை, நடைபெற உள்ளது. முன்னதாக, நேற்று முன்தினம் காலை, பந்தக்கால் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. பின், நாளை, காலை 6:00 மணிக்கு, காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியும், காலை 9:00 மணிக்கு, குண்டுமேடு திரிசூளினி அம்மன் கோவிலிலிருந்து, பால்குடம் புறப்பாடும், மதியம் 12:00 மணிக்கு, திருவீதி அம்மனுக்கு பாலாபிஷேகமும் நடைபெறும். அதன்பின், மாலை 6:00 மணிக்கு, கங்கை திரட்டலும், இரவு 7:00 மணிக்கு, அம்மன் கரக ஊர்வலமும் நடைபெறும். மறுநாள், 30ம் தேதி, காலை 6:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகமும், மதியம் 12:00 மணிக்கு, உச்சிக்கால பூஜையும், மாலை 6:00 மணிக்கு, ஆழ்வார் மண்டபத்திலிருந்து, தாய் வீட்டு சீதனம் கொண்டு வரும் நிகழ்ச்சியும் நடைபெறும். பின், 31ம் தேதி, காலை 6:00 மணிக்கு, அபிஷேகமும், பகல் 12:00 மணிக்கு, கூழ்வார்த்தலும், மாலை 6:00 மணிக்கு, சிறப்பு மலர் அலங்காரத்தில், சுயம்பு திருவீதி அம்மன் வீதிஉலாவும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !