உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவள்ளூர் முருகன் கோவில்களில் இன்று ஆடி கிருத்திகை

திருவள்ளூர் முருகன் கோவில்களில் இன்று ஆடி கிருத்திகை

திருவள்ளூர்: திருவள்ளூர் பகுதிகளில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு, முருகன் கோவில்களில் இன்று சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது. திருவள்ளூர், பஜார் வீதியில் உள்ள திரிபுர சுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், சுப்ரமணிய சுவாமிக்கு மகா அபிஷேகம், காலை 9:00 மணிக்கு நடக்கிறது. தொடர்ந்து மூலவருக்கு சந்தனக் காப்பு அலங்காரமும், உற்சவர் உள் வீதி புறப்பாடும் நடக்கிறது. ஜெயா நகர், வல்லப கணபதி கோவிலில், 108 பால்குட ஊர்வலமும், வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணியருக்கு அபிஷேகமும் நடக்கிறது. தொடர்ந்து, மூலவருக்கு தங்க கவசம் அணிவித்து, மகா தீபாராதனை நடக்கிறது. சிவ - விஷ்ணு கோவிலில், காலை 108 பால்குட ஊர்வலம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !