உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் அலைமோதிய பக்தர்கள்!

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் அலைமோதிய பக்தர்கள்!

மதுரை: ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. ஆடி வெள்ளியை முன்னிட்டு, பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில், பெண்கள் கூட்டம்  அலைமோதியது. கோபி,  பாரியூரில் பிரசித்தி பெற்றது கொண்டத்து காளியம்மன் கோவில். ஆடி வெள்ளியை முன்னிட்டு, காலை முதலே, ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு  வர தொடங்கினர். காலை, 7 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. உச்சிகால பூஜையில் அம்மனை  தரிசிக்க பெண்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. இதுதவிர அனைத்து மாவட்ட கோயில்களிலும் தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம்அலைமோதியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !