மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் பூப்பல்லக்கில் பவனி
ADDED :3402 days ago
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழா நடைபெற்று வருகிறது. ஒன்பதாம் நாள் திரு விழாவில், காலை, 8:00 மணிக்கு அபிஷேக அலங்கார பூஜை நடந்தது. தொடர்ந்து சுற்றியுள்ள கிராம மக்கள் மேளதாளங்கள் முழங்க, வாண÷ வடிக்கையுடன் மாவிளக்கை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். அதைத் தொடர்ந்து அலகு குத்தி தேர் இழுத்து வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். மாலையில் பூப்பல்லக்கில் அம்மன் திருவீதி உலா வந்தது. கோவில் தலைமை பூசாரி பரமேஸ்வரன், உதவி கமிஷனர் ராமு, பரம்பரை அறங்காவலர் வசந்தா, போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் கட்டளைதாரர் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.