உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலமுருகன் கோவிலில் பக்தருக்கு மிளகாய் பொடி அபிஷேகம்!

பாலமுருகன் கோவிலில் பக்தருக்கு மிளகாய் பொடி அபிஷேகம்!

பண்ருட்டி: புலவனுார் பாலமுருகன் கோவிலில் ஆடிகிருத்திகையை முன்னிட்டு நேற்று பக்தர்கள் அலகு குத்தியும், மிளகாய் பொடி  அபிஷேகம்  செய்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர். ஆடி கிருத்திகையை முன்னிட்டு நேற்று காலை 7:30 மணிக்கு  தென்பெண்ணையாற்றில் காவடி அபிஷேக  ஆராதனை நடந்தது.  பிற்பகல் 2:00 மணியளவில் ஏராளமான பக்தர்கள் செடல் போட்டுக்  கொண்டனர். 3:00 மணிக்கு மிளகாய் பொடி அபிஷேகம்,  பால், பன்னீர்அபிஷேகம், தேர் இழுத்தல், தீச்சட்டி ஏந்துதல், அலகு குத்துதல்  உள்ளிட்ட நேர்த்திக் கடன் செலுத்தினர். இன்று 29ம் தேதி இரவு  இடும்பன் பூஜை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !