திருப்பரங்குன்றத்தில் தங்கமயில் வாகனத்தில் சுவாமி உலா!
ADDED :3556 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிக்கார்த்திகையை முன்னிட்டு நேற்று காலை உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர், சிம்மாசனத்தில் புறப்பாடாகி சன்னதி தெருவிலுள்ள ஆடிக்கார்த்திகை மண்டபத்தில் எழுந்தருளினர். இரவு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் முடிந்து தங்கமயில் வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சியில் சுவாமி, தெய்வானை அருள்பாலித்தனர்.