நடுபழனியில் 108 பால்குடம்
ADDED :3403 days ago
அச்சிறுபாக்கம்: நடுபழனி எனப்படும் பெருங்கருணை முருகன் திருக்கோவிலில், 108 பால்குட விழா சிறப்பாக நடைபெற்றது. செய்யூர் வட்டம், அச்சிறுபாக்கத்தை அடுத்த பெருங்கருணையில் மரகத தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் உள்ள பகுதி நடுபழனி என்று அழைக்கப்படுகிறது. 31ம் ஆண்டு ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு, 108 பால் குடங்களுடன் கிரிவல விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது. சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமானோர் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.