புதுமை அந்தோணியார் கோவிலில் தேர் பவனி
ADDED :3403 days ago
புதுச்சேரி: உருளையன்பேட்டை புனித புதுமை அந்தோணியார் கோவில் தேர்பவனி நடந்தது. உருளையன்பேட்டை புதிய பஸ் நிலையம் எதிரில் புனித புதுமை அந்தோணியார் ஆலயத்தில், ஆண்டு திருவிழா கடந்த 19ம் தேதி திருப்பலி, கொடியேற்றத்துடன் துவங்கியது. புதுச்சேரி, கடலுார் மறை மாவட்ட முதன்மை குரு அருளானந்தம், பேராயர் இல்ல ஆவணக் காப்பாளர் மெல்கிசதேக், பங்குத்தந்தை குழந்தைசாமி தலைமையில் கூட்டு திருப்பலி நடந்தது. 20ம் தேதி அருள் மரியநாதன் மறையுரை, 21ம் தேதி துாய இருதய ஆண்டவர் பசிலிக்காவின் உதவி பங்குதந்தை மைக்கேல் துரைராஜ் அடிகள் நற்கருணை அருளாசி, குழந்தைசாமி தலைமையில் தியானம் மற்றும் குணமளிக்கும் வழிபாடு நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நேற்று முன்தினம் நடந்தது. துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, சிவா எம்.எல்.ஏ., ஆகியோர் தேர் பவனியை துவக்கி வைத்தனர்.