உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை கோவில்களில் ஆடி வெள்ளி வழிபாடு: குவிந்த பக்தர்கள்!

கோவை கோவில்களில் ஆடி வெள்ளி வழிபாடு: குவிந்த பக்தர்கள்!

கோவை: ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமை முன்னிட்டு, கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கோவில்களில், சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் அலங்கார பூஜைகள் நடந்தன, ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். கோவை, பெரியகடைவீதி, மணிக்கூண்டு அருகில் அமைந்துள்ள கோனியம்மன் கோவிலில் காலை, அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் நடந்தது. 

பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரியில் உள்ள, மகாலட்சுமி மந்திரில், துர்க்கை அம்மன், மகாலட்சுமி அம்மன், சரஸ்வதி சுவாமிகள் பூ அலங்காரத்தில் அருள்பாலித்தனர். பொள்ளாச்சி ரோடு, குறிச்சி குளக்கரையில் உள்ள, பொங்காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் அலங்காரம் நடந்தது. பேரூர் ரோடு எல்.ஐ.சி., காலனியில் உள்ள, எல்லை மாரியம்மன் கோவிலில், அம்மன் புற்றுக்கண் அலங்காரத்தில் அருள்பாலித்தார். செல்வபுரம், தில்லைநகரிலுள்ள, முத்துமாரியம்மன் கோவிலில், சிறப்பு அபிேஷகம் நடந்தது; அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டது. செட்டி வீதி, காமாட்சியம்மன் கோவிலில், காலை அபிேஷகத்தை தொடர்ந்து, அம்மன் மணப்பெண் அலங்காரத்தில் அருள்பாலித்தார். ராஜவீதியில் உள்ள மாகாளியம்மன் கோவிலில், 25 ஆயிரம் கிலோ எடை கொண்ட பழங்களால் கமலாம்பாள்  அலங்காரத்தில் காட்சியளித்தார்.

தியாகி குமரன் மார்க்கெட்டில் உள்ள, பிளேக் மாரியம்மன் கோவிலில், பார்வதிதேவி, பாலமுருகன் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். நாடார் வீதி, பத்ரகாளியம்மன் கோவிலில், காலை அபிேஷகத்தை தொடர்ந்து,  வளையல் அலங்காரம் செய்யப்பட்டது. கெம்பட்டிகாலனி எல்.ஜி. தோட்டத்திலுள்ள முத்துமாரியம்மன், 1,500 எலுமிச்சை பழத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தார். தடாகம் ரோடு, ராயபுரம் தண்டுமாரியம்மன், சரஸ்வதி அலங்காரத்திலும், காந்திபுரம் முதல் வீதியிலுள்ள மகாமாரியம்மன், அரிசி மாவு, சந்தன அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதேபோல், நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில், சுவாமிக்கு  காலை, சிறப்பு அபிேஷகம், அலங்காரம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !