வனத்திருப்பதி கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை திருவிழா!
உடன்குடி : வனத்திருப்பதியில் புரட்டாசி சனிக்கிழமை திருவிழா செப்.24, அக்.1,அக்.8, அக்15 ஆகிய தேதிகளில் நடக்கிறது. வனத்திருப்பதி புன்னை ஸ்ரீநிவாசபெருமாள், ஆதிநாராயணர், சிவனணைந்தபெருமாள், புரட்டாசி சனிக்கிழமை திருவிழாவையொட்டி வரும் செப்.24, அக்.1, அக்.8 ஆகிய மூன்று சனிக்கிழமையும் கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடைதிறப்பு, கோபூஜையும், காலை 6 மணிக்கு மூலவர் திருமஞ்சனம், சிறப்பு அலங்காரமும், காலை 8.30 மணிக்கு திருவாராதனம் தளிகை, சாத்துமுறை கோஷ்டி நடக்கிறது. நான்காவது சனிக்கிழமை வரும் அக்.15ம் தேதி காலை 5 மணிக்கு நடைதிறப்பும், கோபூஜையும், காலை 6 மணிக்கு மூலவர், உத்ஸவர் திருமஞ்சனமும், சிறப்பு அலங்கார பூஜையும், காலை 8.30 மணிக்கு திருவாராதனம், தளிகை, சாத்துமுறை கோஷ்டியும், மாலை 6.30 மணிக்கு கருட சேவையையொட்டி பெருமாள் திருவீதி உலாவும் நடக்கிறது. செப்.24, அக்.1, அக்.8, அக்.15 ஆகிய நான்கு சனிக்கிழமையும் ஹோட்டல் சரவணபவன் சார்பில் காலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. இதுகுறித்து கோயில் நிறுவனர் ராஜகோபால் கூறுகையில் இக்கோயில் கும்பாபிஷேகம் நடந்து கடந்த 2 1/2 வருடமாகியுள்ளது. மேலும் கோயிலில் மூன்று காலபூஜை நடக்கிறது. உச்சி கால பூஜையின் போது தினசரி கருடன் கொடி மரத்தைச் சுற்றிவருவது தனிச்சிறப்பாகும். பக்தர்களின் வசதிக்காக விரைவில் 22ரூம் ஏசி வசதி கொண்ட செந்தில்முருகன் லாட்ஜ், ராஜகோபால் வணிக வளாகமும் துவங்கப்படவுள்ளது. மேலும் 41 ஏக்கர் பரப்பளவில் நான்கு ரத வீதி கொண்ட வனத்திருப்பதி நகர் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களின் நலன்கருதி தென்னக ரயில்வே மூலம் நெல்லையில் இருந்து வனத்திருப்பதி மற்றும் திருச்செந்தூர் வனத்திருப்பதி மார்க்கமாக சிறப்பு ரயில் நான்கு சனிக்கிழமையும் இயக்கப்படுகிறது. இது போன்று நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூரில் இருந்து வனத்திருப்பதிக்கு அரசு மற்றும் தனியார் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்ய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். ஏற்பாடுகளை கோயில் நிறுவனர் ராஜகோபால், ஹோட்டல் சரவணபவன் முதன்மை நிர்வாகி கணபதி, சிற்பி கணேசன், கோயில் நிர்வாகி வசந்தன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.