உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தென்காசி கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

தென்காசி கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

தென்காசி:தென்காசி பகுதி கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு நடந்தது.தென்காசி காசிவிசுவநாதர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு நறுமணப் பொருட்களால் மகா அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. விநாயகருக்கு சர்க்கரை பொங்கல், பழ வகைகள் படைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. தென்காசி குலசேகரநாதர் கோயில், தென்பழனியாண்டவர் கோயில், மேலசங்கரன்கோயில் விநாயகர் சன்னதிகளில் சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது.தென்காசி தெற்குமாசி வீதி கற்பக விநாயகர் கோயிலில் கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. முடுக்கு விநாயகர், செண்பகவிநாயகர், கூளக்கடை பஜார் சந்தி விநாயகர், அணைக்கரை விநாயகர், நம்பிராஜன் ரோடு தர்ம விநாயகர், தாலுகா அலுவலக வளாக விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு நடந்தது. குற்றாலம் குற்றாலநாதர் கோயில் விநாயகர் சன்னதி, இலஞ்சி குமாரர் கோயில் விநாயகர் சன்னதி, குன்னக்குடி குற்றால விநாயகர், குத்துக்கல்வலசை பசிதுஷ்டராய கண்ட விநாயகர் கோயில், இலத்தூர் நினைத்ததை நிறைவேற்றும் விநாயகர், பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயில் அடிவார விநாயகர், சிவராமபேட்டை கற்பக விநாயகர் கோயில் மற்றும் தென்காசி சுற்று வட்டார பகுதி விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு நடந்தது.இதனால் விநாயகர் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !