உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகா ருத்ராபிஷேக விழா: ஒரு லட்சம் ஜப பாராயணம்!

மகா ருத்ராபிஷேக விழா: ஒரு லட்சம் ஜப பாராயணம்!

கோவை: கோவை ராஜஸ்தானி சங்கத்தில் மகா ருத்ராபிஷேகம் நேற்று நடந்தது. ஆர்.எஸ்.புரம், டி.பி.ரோட்டில் உள்ள, ராஜஸ்தானி சங்கத்தில் நேற்று  மதியம், 12:00 மணிக்கு, அங்கு வைக்கப்பட்டிருந்த லிங்கத்துக்கு, சிறப்பு பூஜைகள், ஒரு லட்சம் ஜப பாராயணம் நடந்தது. பொதுமக்கள் தங்கள் கர ங்களாலேயே அபிஷேகம் செய்தனர். மாலை, 6:30 மணிக்கு, நாட்டில் உள்ள அனைத்து நதிகளில் இருந்தும் கொண்டுவரப்பட்ட புனித நீர்,  பசும்பால், தாமரை, தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், பன்னீர், திருமஞ்சனம், சந்தனம், பழரசம், விபூதி, கரும்பு சர்க்கரை, அரிசி மாவு, தேன், நெய்  உள்ளிட்ட பொருட்களால் மகா ருத்ராபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, அலங்கார, தீபாராதனை நடந்தது; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !