உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் மாரியம்மன் கோவிலில் ஆடி பிரம்மோற்சவ தேரோட்டம்

சிதம்பரம் மாரியம்மன் கோவிலில் ஆடி பிரம்மோற்சவ தேரோட்டம்

சிதம்பரம்: சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன்  கோவிலில் ஆடி பிரம்மோற்சவத்தையொட்டி நேற்று தேரோட்டம் நடந்தது. சிதம்பரம் கீழத்தெரு  மாரியம்மன் கோவிலில் ஆடி பிரம்மோற்சவம் கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி தினம் மாரியம்மனுக்கு சிறப்பு  அபிேஷகம், தீபாராதனை, இரவில் வீதியுலா நடைபெற்று வருகிறது. நேற்று தேரோட்டத்தையொட்டி காலை மாரியம்மனுக்கு சிறப்பு அபிேஷகம்,  அலங்காரம், சிறப்பு  தீபாராதனைகள் நடந்தது. பின்னர் மாரியம்மன் புறப்பாடு செய்து நடராஜர் கோவில் கீழ சன்னதியில் தேரில் எழுந்தருளி  பக்தர்களுக்கு காட்சியளித்தார்.  பின்னர் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் சார்பில் மண்டகப்படி பூஜையையொட்டி மாரியம்மனுக்கு பட்டு  சார்த்தி, கஞ்சி நெய்வேத்தியம் வழிபாடு நடந்தது. பகல் 12 மணிக்கு மாரியம்மன் தேரோட்டம் நடந்தது.  தேர் முக்கிய வீதிகள் வழியாக மாலை ÷ காவிலில் நிலைக்கு வந்தது.  இன்று 1ம் தேதி தீமிதி உற்சவத்தையொட்டி அதிகாலை முதல் அங்கபிரதட்சணம், அலகு போடுதல், பால் காவடி, பாடை  காவடி என பக்தர்கள் வேண்டுதல் பிரார்த்தனை செய்கின்றனர். காலை 9:00 மணிக்கு தீ மிதிப்பவர்களுக்கு காப்புக் கட்டுதல், 10:00 மணிக்கு ÷ சாதனை கரகம், அலகு தரிசனம், 2:00 மணிக்கு அக்கினி சட்டி எடுத்து, மாலை தீமிதி உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !