உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காலவாக்கம் சின்னம்மன் கோவிலில் இன்று திருவிழா

காலவாக்கம் சின்னம்மன் கோவிலில் இன்று திருவிழா

காலவாக்கம்: காலவாக்கம், சின்னம்மன் கோவிலில், ஆடித்திருவிழா, சிறப்பாக கொண்டாடப்படுகிறது. திருப்போரூர் அடுத்த காலவாக்கம்  பகுதியில், சின்னம்மன் கோவில் உள்ளது. இங்கு, 18ம் ஆண்டு, ஆடித்திருவிழா, கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. விழாவின், முதல்  நிகழ்வாக, கடந்த வெள்ளிக் கிழமையன்று, பால்குட விழா நடைபெற்றது. நேற்று காலை, அம்மனின், கரகம் வீதியுலா வந்தது. விழாவின், முக்கிய  நிகழ்வான, அக்னி வசந்த விழா இன்று மாலை நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து, தெப்பம் உற்சவம், நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !