உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரூர் பசுபதீஸ்வரர் கோவில் குருபெயர்ச்சி விழா

கரூர் பசுபதீஸ்வரர் கோவில் குருபெயர்ச்சி விழா

கரூர்: கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் நாளை (2ம் தேதி) குருபெயர்ச்சி விழா நடந்து வருகிறது. நாளை சிம்ம ராசி யில் இருந்து கன்னி ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியடைகிறார். இதையடுத்து, பசுபதீஸ்வரர் கோவில் நேற்று முதல் குருப்பெயர்ச்சி விழா துவங்கியது. நேற்று காலை, 7 மணி முதல் மாலை, 5 மணி வரை விநாயகர் வழிபாடு, நவக்கிரஹ அபிஷேகம், சங்கல்பம் ஆகியவற்றை தொடர்ந்து லட்சார்ச்சனை நடந்தது. தொடர்ந்து, நாளை நவக்கிரஹ லட்சார்ச்சனையும், 2ம் தேதி காலை, 7 மணிக்கு பல்வேறு அபிஷேக ஆராதனை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !