விளமல் பதஞ்சலி மனோகர் கோயிலில் ஆடிப்பூர பெருவிழா!
திருவாரூர்: தியாகராஜ சுவாமி திருக்கோயிலின் உபகோயிலான விளமல், மதுரபாஷினி சமேத பதஞ்சலி மனோகர் கோயிலில் ஆடிப்பூர உற்சவ பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. சக்தி பீடங்களில் ஸ்ரீவித்தியா பீடமாக அம்பிகை மூலாதார ஷேத்திரத்தில் சிவசக்தியாய் நின்று ஆதி அம்பிகை சகல சவுந்தர்ய, சவுபாக்கியம் அருளும் தேவிக்கு ஆடிப்பூர பெருவிழா நடைபெறுகிறது.
நிகழ்ச்சி நிரல்:
1.8.2016 (திங்கள்): மாலை: 6.45 மணிக்கு- மதுரபாஷனிக்கு அபிஷேகம்
இரவு: 8.00 மணிக்கு- அம்பாள் மயில் வாகனம் புறப்பாடு (உள்பிரகாரம்)
2.8.2016 (செவ்வாய்): மாலை: 6.45 மணிக்கு- மதுரபாஷினிக்கு அபிஷேகம்
இரவு: 8.00 மணிக்கு- அம்பாள் ஐராவத வாகனத்தில் புறப்பாடு (உள்பிரகாரம்)
3.8.2016 (புதன்): மாலை: 6.45 மணிக்கு- மதுரபாஷினிக்கு அபிஷேகம்
இரவு: 8.00 மணிக்கு- பூதவாகனம் அம்பாள் புறப்பாடு (உள்பிரகாரம்)
4.8.2016 (வியாழன்):மாலை: 6.45 மணிக்கு- மதுரபாஷினிக்கு அபிஷேகம்
இரவு: 8.00 மணிக்கு- ரிஷபவாகனம் அம்பாள் புறப்பாடு (உள்பிரகாரம்)
5.8.2016 (வெள்ளி):காலை: 9.45 மணிக்கு- மதுரபாஷினிக்கு பூர மகா அபிஷேகம்
காலை: 11.30 மணிக்கு- அம்பாள் பாத தரிசனம், அம்பாளுக்கு அமுதம் (சாப்பாடு) சமர்பணம் செய்தல்.
இரவு: 6.45 மணிக்கு- அம்பாளுக்கு புஷ்பாஞ்சலி.
இரவு: 7.45 மணிக்கு- மாவிளக்கு ஏற்றி பூஜை செய்தல்.
6.8.2016 (சனி): மாலை: 6.45 மணிக்கு- விடையாற்றி