குருவித்துறை கோயிலில் குருபெயர்ச்சி விழா கோலாகலம்!
குருவித்துறை: சோழவந்தான் குருவித்துறை சித்திர ரதவல்லபபெருமாள் கோயிலில் நடந்த குருபெயர்ச்சி விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர்.
இக்கோயிலில் தனிசன்னதியாக சுயம்புகுருபகவான் எழுந்தருளியுள்ளார். இன்று(ஆக.2) காலை 9.27 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு குருபகவான் இடபெயர்ச்சியானார். அதனை முன்னிட்டு பட்டர்கள் ஸ்ரீதர்,ரங்கநாதர்,பாலாஜிசடகோபர் அனைத்து ராசிக்காரர்களுக்கு பரிகாரபூஜையாக லட்சார்ச்சனை செய்ய, காலை 8 மணிக்கு திருமஞ்சனம் சாத்தல், தொடர்ந்து புனிதநீர் குடங்களை யாகசாலையில் வைத்து பரிகார மஹாயாக பூஜைகள் நடந்தது. பின்னர் சுயம்பு குருபகவான் மற்றும் சுயம்புசக்கரத்தாழ்வார் சுவாமிக்கு பட்டர்கள் புனிதநீர் அபிஷேகம், தீபாராதனை செய்தனர். பல மாவட்டங்களை சேர்நத பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர்.
பக்தர்களுக்கு அன்னதானம் சுவாமிபிரசாதம் வழங்கப்பட்டது. நீதிபதிகள் முருகன், கருணாநிதி, தாசில்தார் திருமலை, அமைச்சர்கள் செல்லூராஜூ, உதயகுமார், எம்.எல்.ஏ.,மாணிக்கம் மாவட்ட பேரவை செயலாளர் தமிழரசன், சரவணன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் செல்வம் பலர் பங்கேற்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை டி.எஸ்.பி.,வேல்முருகன், இன்ஸ்பெக்டர் தூ மணிவெள்ளச்சாமி செய்திருந்தனர். ஊராட்சி தலைவர் கர்ணன், துணைதலைவர் பன்னீர் குடிநீர்,சுகாதார வசதி செய்தனர். விழா ஏற்பாடுகளை தக்கார் ஞானசேகரன், நிர்வாக அதிகாரி விஸ்வநாத் பணியாளர்கள் செய்திருந்தனர்.