உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயில் வீதியில் கூடுதல் சி.சி.டி.வி., கேமராக்கள்

ராமேஸ்வரம் கோயில் வீதியில் கூடுதல் சி.சி.டி.வி., கேமராக்கள்

ராமேஸ்வரம்:ஆடி அமாவாசை பக்தர்கள் பாதுகாப்பிற்கு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ரதவீதியை சுற்றிலும் 30 சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இன்று (ஆக.,2) ஆடி அமாவாசையையொட்டி, ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடலில் ஒரு லட்சம் பக்தர்கள் புனித நீராடி கோயிலில் தரிசனம் செய்வார்கள். கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடர்கள் கைவரிசை காட்டுவதால் நகைகள், அலைபேசி, பணத்தை இழந்து பக்தர்கள் தவிக்கின்றனர். பக்தர்கள் போர்வையில் ஊடுருவும் திருடர்களை கண்டறிய கூடுதல் கண்காணிப்பு கேமரா பொருத்த கோயில் நிர்வாகத்திற்கு மணிவண்ணன் எஸ்.பி., உத்தரவிட்டார். அதன்படி நேற்று, கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் நடந்து செல்லும் கோயில் நான்கு ரதவீதி, சன்னதி தெரு, அக்னி தீர்த்த கடற்கரையில் 30 புதிய சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தினர். 500 போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !