உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ப.வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் குருப்பெயர்ச்சி சிறப்பு பூஜை

ப.வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் குருப்பெயர்ச்சி சிறப்பு பூஜை

ப.வேலூர்: ப.வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், குருபகவான் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ப.வேலூர் அடுத்த, சோழசிராமணி மீனாட்சி உடனமர் சொக்கநாதர் கோவிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு, தட்சிணாமூர்த்திக்கு, நேற்று மாலை, 6 மணிக்கு மேல் சிறப்பு யாகமும், பூஜைகளும் நடந்தன. ப.வேலூர், பொத்தனூரில் உள்ள சக்திவிநாயகர் கோவில், வெங்கமேடு பகுதியிலுள்ள விநாயகர் கோவில், பொத்தனூர், பாண்டமங்கலம் காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களில் சிறப்பு யாகங்களும், விசேஷ பூஜைகளும் இன்று காலை நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !