காந்தல் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா
ADDED :3402 days ago
ஊட்டி: ஊட்டி காந்தல் காசிவிஸ்வநாதர் கோவிலில் இன்று (2ம் தேதி) குருப்பெயர்ச்சி விழா நடக்கிறது. காலை முதல் விக்னேஸ்வர பூஜை, கலசபூஜை, யாகபூஜை, அபிஷேகம், மகாதீபாராதனை நடக்கிறது.தொடர்ந்து, 9:30 மணிக்கு குருபகவான் சிம்ம ராசியிலிருந்து, கன்னி ராசிக்கு பிரவேசிப்பதால், கன்னி, துலாம், தனுசு, கும்பம், மேஷம், மிதுனம், கடக ராசிகாரர்களுக்கு பரிகார பூஜைகள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, தட்சிணாமூர்த்தி திருமடாலயம் அறங்காவலர் குழு, காசிவிஸ்வநாத சுவாமி சேவா, ஆலய முன்னேற்ற சங்கம், விசாலாட்சிஅம்பாள் மகளிர் குழுவினர் செய்துள்ளனர்.