தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா: ஆறு அமைச்சர்கள், ஸ்டாலின் பங்கேற்பு
ஈரோடு: அரச்சலூர் அருகே, ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை மணி மண்டபத்தில், அரசு சார்பில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா, இன்று நடக்கிறது. காலை, 8 மணிக்கு, கலெக்டர் பிரபாகர், தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவிக்கிறார். தொடர்ந்து, 10.45 மணிக்கு அரசு சார்பிலான விழா நடக்கிறது. விழாவில் அமைச்சர்கள் இடைப்பாடி பழனிசாமி, தங்கமணி, வேலுமணி, கருப்பண்ணன், கடம்பூர் ராஜூ, விஜயபாஸ்கர் மற்றும் உள்ளூர் எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள் பலரும் பங்கேற்கின்றனர். இவர்கள், தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, விழாவில் பேச உள்ளனர். அரசு சார்பில் பல்வேறு துறை சார்பில் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. விழாவில் பல்வேறு கட்சியினர், அமைப்பினர் பங்கேற்க உள்ளதால், ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்படும். அந்த நேரத்தில் வந்து, சிலைக்கு மாலை அணிவிக்க வேண்டும். தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினுக்கு காலை, 8 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.