உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவிடந்தை கோவில் பிரசாத கடை ஏலம்

திருவிடந்தை கோவில் பிரசாத கடை ஏலம்

திருவிடந்தை: திருவிடந்தை கோவிலில், இழுபறி நீடித்த உரிம ஒப்பந்தங்கள் முடிவிற்கு வந்தன. மாமல்லபுரம் அடுத்த, திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவிலில், பிரசாத விற்பனை கடை நடத்த, ஓராண்டு உரிமம் வழங்க, கோவில் நிர்வாகம் சார்பில், மூன்று முறை பொது ஏலம் நடத்தப்பட்டது. ஏல தொகை அதிகம் என கருதி, எவரும் ஏலம் கோரவில்லை. இந்நிலையில், 29ம் தேதி, வேலுார் இணை ஆணையர் சிவாஜி முன்னிலையில், மீண்டும் ஏலம் நடத்தப்பட்டது. இதில், பிரசாத கடை உரிமம், 19 லட்சம் ரூபாய்க்கும், படக்கடை உரிமம், 2.34 லட்சம் ரூபாய்க்கும் ஏலம் விடப்பட்டது. அடுத்த ஆண்டு ஜூன் 30 வரை உரிமம் செல்லும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !