உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அய்யாவாடியில் நிகும்பலா யாகம்: திரளான பக்தர்கள் தரிசனம்

அய்யாவாடியில் நிகும்பலா யாகம்: திரளான பக்தர்கள் தரிசனம்

மயிலாடுதுறை: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த அய்யாவாடி கிராமத்தில் ஸ்ரீ மகா பிரத்தியங்கிராதேவி கோயில் உள்ளது. எட்டுதிக்கும் மயானத்தால் சூழப்பட்ட இக்கோயிலின் 5 வகை யான இலைகளை கொண்ட தலவிருட்சம் அமைந்துள்ளது. ராவணன் மகன் மேகநாதன் மற்றும் பஞ்சபாண்டவர்கள் இந்த தலத்திற்கு வந்து அம்பாளை பூஜித்து வேண்டிய வரங்களை பெற்றுள்ளனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலில் அமாவாசை தோறும் மிளகாய் வற்றல் கொண்டு நடத்தப்படும் நிகும்பலா யாகம் பிரசித்திப்பெற்றது.

இந்த யாகத்தில் கலந்து கொண்டு அம்பாளை சரணடைந்து, பிரார்த்தனை செய்தால் சத்ரு உபாதைகள் நீங்கி, சகல நன்மைகளும் கிடைக்கும். ஆடிமாத அமாவாசையை முன்னிட்டு, காலை கோயில் மண்டபத்தில் அம்பாளை எழுந்தருள செய்து பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து மதியம் 1 மணிக்கு 16 சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத,கோயில் தலைமை அர்ச்சகர் தண்டபாணி குருக்கள் யாக குண்டத்தில் மிளகாய் வற்றல், பட்டு புடவைகளை சேர்த்து நிகும்பலா யாகத்தை நடத்தி வைத்தார். தொடர்ந்து அம்பாலுக்கு அபிஷேகம் மற்றும் மகா  தீபாராதனை நடை பெற்றது. யாகத்தில் அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையன், முன்னாள் தமிழ்நாடு காங் கமிட்டி தலைவர் தங்கபாலு, டைரக்டர் டி.ராஜேந்தர், உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசித்தனர். யாகத்திற்கான ஏற்பாடுகளை சங்கர் குருக்கள் செய்திருந்தார். கும்பகோணத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !